வணக்கம்........
ஒருமுறை வியாசர் அவரோட சீடர் 'கனகதாசன்' கிட்ட ஒரு கேள்வி கேட்டார்.
"கனக தாசா...!! நம்முள் யார் வைகுண்டம் போவார்கள் ??" என கேட்டார் . கனக தாசர் பதில் கூறவில்லை. பின் ஒவ்வொரு சீடனாக கை காட்டி "இவன் வைகுண்டம் போவானா?" எனக்கேட்டார். அனைவருக்கும் கனகதாசன் "இல்லை" என பதிலளித்தார் .
பின் வியாசர் "நான் வைகுண்டம் போவேனா?" என கேட்டார். அதற்கும் கனக தாசர் "இல்லை" என கூறினார் .
சீடர்கள் அனைவரும் கனக தாசன் மீது ஆத்திரம் கொண்டனர். அனால் வியாசர் பொறுமையாய், "சரி , நீ வைகுண்டம் போவாயா?" எனக்கேட்டார் .
அதற்க்கு கனக தாசன் "நான் போனால் போவேன் " என்று பதிலளித்தார். இதைக்கேட்ட சீடர்களின் கோபம் அதிகமாயிற்று . ஒரு சீடன் எழுந்து "கனக தாசா குருவிடம் நீ பேசும் வார்த்தை தகாதவை " என்று கண்டித்தான் .
வியாசர் அவனை அமர்த்தி விட்டு பொறுமையாய் " கனக தாசா எவ்வாறு கூறுகிறாய்?" என கேட்டார்.
அதற்க்கு கனகதாசன் "குருவே, நான் அளித்த பதில், "நான் " என்னும் அகந்தை என்னை விட்டு போனால் நான் வைகுண்டம் போவேன்" என்று கூறினார்.
அப்போது தான் சீடர்களுக்கு விளங்கியது .
எனவே "நான்" என்னும் அகந்தையை விட்டு இறைவனடி சேரும் வழியை தேட வேண்டும்...

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக