இன்று வரலட்சுமி விரதமும் திருவோண விரதமும் ஒரே நாளில் ..........
அம்மா வரலக்ஷ்மி விரதத்துக்கு போயிருக்காங்க.......
வரலக்ஷ்மி விரதம் ஆவணி மாதத்தில் பௌர்ணமிக்கு முன்னால் வரும் வெள்ளிக்கிழமையில் அனுஷ்டிப்பார்கள். திருவோண விரதம் ஆவணி மாதத்தில் வரும் திருவோண நட்சத்திர நாளில் அனுஷ்டிப்பார்கள்.
இந்த இருவிரதமும் உடல் மற்றும் மன தூய்மையை அடிப்படையாய் கொண்டு இருக்கும் விரதங்கள்.
பத்ரச்ரவன் என்ற மன்னனின் மனைவி கசந்திரிகா. இவள் மிகவும் தெய்வீகமான தூய்மை உடையவள். தன்னையும் தன் இருப்பிடத்தையும் தூய்மையாக வைத்துகொள்பவள் . அழகு,அறிவு ,கற்பு, கல்வி ,குணம் அனைத்திலும் சிறந்த அவளுக்கு சியாமா என்ற பெண் குழந்தை பிறந்தது.
அவளைப்போன்றே சியமாவையும் வளர்த்தாள்.
கசந்த்ரிகாவின் தூய்மையிலும் பக்தியிலும் கருணை கொண்ட மகாலட்சுமி ஒரு ஆவணி வெள்ளிகிழமையில் சுமங்கலி ரூபம் கொண்டு கசந்த்ரிகாவின் அரண்மனைக்குள் சென்றாள் . அங்கு நன்றாக சாபிட்டுவிட்டு தாம்பூலத்தை சுவைதுக்கொண்டிருகும் சந்திரிகா சுமங்கலியை பார்த்து என்ன வேண்டும் என கேட்டாள் . அதற்கு மகாலட்சுமி "கசந்திரிகா ,இன்று மகாலட்சுமி அவதரித்த நாள் இன்று விரதமிருந்தால் மகாலட்சுமி வீட்டில் வாசம் செய்வாள்." என்று கூற, தன் அந்தபுரத்திற்கு வந்து தன செயலில் குறை கூறும் சுமங்கலியிடம் கோபம் கொண்டாள் ராணி. அவளை கடும் சொற்கள் கூறி வீட்டை விட்டு வெளியேற்றினாள். மகாலட்சுமி அழுதுகொண்டு வெளியே வந்ததை கண்ட இளவரசி சியாமா , அவளிடம் காரணம் கேட்டாள் . அதற்கு மகாலட்சுமி நடந்ததை கூறினாள் . சியாமா "என்னிடம் விரதம் இருக்கும் முறையை கூறுங்கள் நான் அனுஷ்டிக்கிறேன்" என்று கூறினாள் .
மகாலட்சுமி மனம் மகிழ்ந்து சியாமாவிடம் விரத முறையை கூறி சென்றாள் . சியாமா வரலட்சுமி விரதம் இருந்து வந்தாள். அவளுக்கு திருமணம் ஆனது . இவள் சென்றதும் புகுந்த வீடு செல்வ செழிப்புற்றது. ஆனால் அவள் சென்றதும் பத்ரச்ரவனனின் நாடு வளம் குன்றி போரில் நாட்டை பறிகொடுத்தான் . கணவனும் மனைவியும் ஊர் ஊராக சுற்றினார்கள்.
சியமாவிடம் உதவி கேட்டனர்.
சியாமா ஒரு பானை நிறைய பொற்காசுகளை கொடுத்து இதை வைத்து வாழ்க்கை நடத்துமாறு கூறினாள் . ஆனால், அதை கசந்த்ரிகா திறந்தபோது வெறும் கரிதுண்டுகளே இருந்தன. இதை அறிந்த சியாமாவுக்கு தன் தாய் ஒருமுறை மகாலட்சுமியை அவமானப்படுத்தியது நினைவிற்கு வந்தது. தன் தாயை அழைத்து நடந்ததை கூறி மகாலட்சுமி சொன்ன விரத முறைகளை கூறினாள் . கசந்த்ரிகா தன தவறை உணர்ந்து விரதம் மேற்கொண்டாள் . அஷ்டலட்சுமியின் அனுகிரகத்தால் இழந்த நாடு திரும்ப பெற்று சுக போகங்களை அனுபவித்து வாழ்ந்தனர்.
இந்த விரதமே வரலட்சுமி விரதமாக கொண்டாடப்படுகிறது. இந்த விரதம் மேற்கொள்வதால், சுமங்கலிப்பெண்கள் கணவன் ஆயுள் கூடும். கன்னிப்பெண்களுக்கு நல்ல கணவன் அமைவான் . குழந்தை இல்லாதவர்க்கு சந்தான லட்சுமியின் அருளலால் குழந்தை செல்வம் வந்துசேரும். வீட்டில் அனுஷ்டித்தால் மகாலட்சுமி வீட்டில் வந்து வாசம் செய்வாள்.
ஓம் நம சிவாய !!!

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக