தென்னாடுடய சிவனே போற்றி!!!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!!!!
‘கங்கையில் குளித்தால் பாவம் போகும், பிறவி பிணி தீரும்’ என்று சொல்வார்கள். அது ஏன் கங்கையில் மட்டும்? பிரம்மனாலும் காண முடியாத சிவனின் முடியில் அவள் எவ்வாறு அமர்ந்தாள்??
சரி வாங்க ஸ்டோரிக்கு போகலாம்..... :)
சகர மன்னன் அஸ்வமேத யாகம் நடத்தி இந்திர பதவியை அடைய வேண்டும் என எண்ணினான் . அதற்க்கு தேவையானவைகளை தயார் செய்தான் . அது என்னப்பா அஸ்வமேத யாகம்னு கேக்கறிங்களா ???
அஸ்வமேத யாகம் நடத்தி யாகத்தின் முடிவில் பட்டத்து குதிரையை ('அஸ்வம்' என்றால் குதிரை) அவிழ்த்து விடுவார்கள். அது எந்த நாட்டுக்கு செல்கிறதோ அந்த நாட்டின் மன்னன் நாட்டை ஒப்படைக்க வேண்டும் அல்லது குதிரையை சிறைபிடித்து போர் புரிய வேண்டும்.
இவ்வாறு 100 அஸ்வமேத யாகங்கள் முடித்தால் 'இந்திர பதவி' கிட்டும் . சகர மன்னன் 99 யாகங்களை முடித்தான் . 100வது யாகம் நடந்தால் பதவி பறிபோகும் என்ற பயத்தில் இந்திரன் சூழ்ச்சி செய்தான். 100வது யாகம் நடந்துகொண்டிருக்கையில் கட்டி வைத்திருந்த பட்டத்து குதிரையை அவிழ்த்து கொண்டு சென்று கபில முனிவரின் ஆசிரமத்தில் தவம் செய்து கொண்டிருந்த கபிலரின் பின்னால் கட்டிவிட்டு மறைந்துவிட்டான் இந்திரன் .
யாகம் முடியும் நேரத்தில் குதிரையை காணவில்லை . சகர மன்னனின் மகன்கள் மிக பலசாலிகள் . அவர்களை அனுப்பி குதிரையை மீட்டு வருமாறு மன்னன் கட்டளையிட்டான் . அவர்களும் குதிரையை தேடி செல்கிறார்கள் . கபிலரின் ஆசிரமத்தில் குதிரையை கண்டு, தவத்தில் இருக்கும் கபிலரிடம் 'குதிரையை கொண்டு வந்து மன்னரிடம் கொடுத்து காலில் விழுந்து மன்னிப்பு கேள் அல்லது இப்போது எங்களுடன் போரிடு " என்றனர். கபிலர் தன தவத்தில் அசயக்கூட இல்லை. கோபமடைந்த சகர குமாரர்கள் கபிலரின் தொடையில் கத்தியால் கீறினர். அதற்கும் அசரவில்லை . கபிலரை தூக்கி நிலத்தில் அடித்தனர் அவர் தவம் கலைந்தது.
கோபத்தில் கபிலர் பார்த்தவுடன் சகர குமாரர்கள் எரிந்து சாம்பலாகினர் . இதை கேள்விப்பட்ட சகர மன்னனும் தன் மகன்களை இழந்த துக்கத்தில் யாகத்தீயில் குதித்து தன உயிரை போக்கிகொண்டான்.
சில காலம் கழித்து சகர வம்சத்தில் பகீரதன் என்ற மன்னன் பிறந்தான்.
அவன் நாடு வறுமைக்குள்ளானது. அப்போது நாரதர் அவனிடம் வந்து நடந்ததை கூறி அவனது துயருக்கு காரணம் சாந்தி அடையாத அவனின் முன்னோர்களின் ஆன்மாதான் என்பதை விளக்கி கூறினார்.
இதற்க்கு உபயம் கேட்ட பகீரதனிடம், கங்கை சத்திய லோகத்தில் இருக்கிறாள் அவளுக்குள் உன் முன்னோர்களின் சாம்பல் கரைந்தால் மட்டுமே உனக்கு பித்ரு தோஷம் நீங்கி அவர்களுக்கு முக்தி கிட்டும் என்றும் கங்கா தேவியை எண்ணி தவம் இருக்க சொன்னார் .
பகீரதனும் தன முன்னோர்கள் நன்மைக்காகவும்,ம் மக்கள் நன்மைக்காகவும் தவமிருந்தான். கங்கா தோன்றினாள். அவளிடம் பூமியில் பிரவேசிக்கும்படி வேண்டினான். ஆனால் கங்கை மறுத்தாள். அவளின் வேகம் மொத்த உலகத்தையும் அழிக்கும் சக்தியுடையது என்றும் ஈசனிடம் இதற்கு உபாயம் கேட்க கூறி மறைந்தாள் .
பகீரதன் ஈசனை நோக்கி தவம் இருந்தான். ஈசனும் காட்சியளித்து ஒரு உபாயம் கூறினார். கங்கையின் வேகத்தை கட்டுபடுத்த கூடிய ஆற்றல் தனக்கு மட்டும் உள்ளதாகவும் தன ஜடாமுடியின் வழியில் கங்கா இறங்கினால் அவளின் வேகம் கட்டுக்குள் வரும் என்றார். பகீரதனும் கங்கையிடம் இதை கூறினான். "ஈசன் முடி தொடுவது எனக்கு கிடைத்த பெரும் பாக்கியம்" என்று கூறி உலகில் பிரவேசிக்க ஒப்புக்கொண்டாள் .
சிவபெருமான் இமயத்தின் உச்சியில் நின்று தன் ஜடாமுடியை அவிழ்க்க, அதில் கங்கா தேவி பிரவேசித்து தன் வேகம் கட்டுப் படுத்தப்பட்டு பூமியில் பாய்ந்தாள். நிலங்களை வளமாக்கி பகீரதனின் முன்னோர்களின் முக்திக்கும் வழி செய்தாள். கங்கை புனிதமான நதி என்பதால், அதை தவ வலிமையால் உலகிற்கு கொண்டு சேர்த்த பகீரதன் பெயரையே கங்கை முதலில் பிரவேசித்த இடத்திற்கு சூட்டினார் சிவன்.
கங்கையின் புனிதம் மாறாமல் இருந்து உலக மக்களின் நன்மை தொடர கங்கை எப்பொழுதும் தன் தலையில் இருப்பதே நல்லது என்று ஏற்றார் . அன்றிலிருந்து கங்காதரனாக காட்சியளிக்கிறார் .
கங்கையில் குளித்தால் பாவம் போக்கி புண்ணியம் தரும்,
ஓம் நம சிவாய !!!

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக