தென்னாடுடைய சிவனே போற்றி !!!!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி !!!
பொதுவாக சிவாலயங்களில் மூலவரை வலம் வரும்போது இடப்பக்கத்தில் ஒரு சிலை சிவனை நோக்கியபடி அமைக்கப்பட்டிருக்கும். பலர் அங்க போய் கைதட்டிட்டு வருவாங்க. எதுக்கு சார் அந்த சாமி முன்னாடி கை தட்டறிங்கன்னு கேட்டா "அவர் தியானத்துல இருப்பர். நான் வேண்டிக்கறது அவருக்கு கேக்கணும்ல அதான் அவரை கை தட்டி எழுப்பறோம்" னு சொல்லறாங்க.
இன்னும் சிலர் "அது செவிட்டு சாமி அதான் கை தட்டுறோம்"னு சொல்லறாங்க. மூனாவது ரகம் எதுக்கு தட்றோம்னே தெரியாது ஆனா தட்டிட்டு போவாங்க.
சரி யார் தாங்க அவரு!!!
அவரு எதுக்கு அங்க உக்காந்திருக்கிறார் !!! வேற இடமே இல்லையா!!!
இந்த கை தட்டுற பழக்கம் எப்படி வந்துச்சு ?
இன்னும் சிலர் அவங்க போட்டிருக்க துணில இருந்து ஒரு நூலை உருவி சாமி மேல போடுவாங்க. அது எதுக்கு?
விஷயம் என்னனு சாய் சரவணன் சொல்றன் கேட்டுக்கோங்க !! :)
அவர் பேரு "சண்டிகேஸ்வரர்". ஈஸ்வர பட்டம் பெற்றவர். அதுக்கு எந்த காலேஜ்ல படிக்கணும்னு யோசிக்கறவங்கள்லாம் அப்படியே இந்த பேஜ்ஜ கிளோஸ் பண்ணிருங்க.
ஈஸ்வர பட்டம் வாங்கறது சாதாரண விஷயம் இல்ல. அவங்க தலை சிறந்த சிவபக்தர்கள். அவங்க பக்திக்கு ஈடு குடுக்க முடியாது. அதுனால தானோ என்னவோ ஈஸ்வரன் அவரையே குடுத்துட்டாரு போல.
குறிப்பு: ஈஸ்வர பட்டம் பெற்ற மற்றும் சிலர் சனீஸ்வரன், ராவணேஸ்வரன் , நந்தீஸ்வரர். இவங்க சிவ பக்தியை பத்தி நான் சொல்லனும்னு இல்ல.
சண்டிகேஸ்வரர் சிவன் முன்னாடி உக்காந்து தியானம் பண்ணிட்டு இருக்கும்போது குறுக்க போனதுக்காக பெத்தவங்களையே வெட்டினார்னு சொல்றாங்க. அது நால தான் அவரை இடப்பக்கமாக வணங்கிட்டு இடப்பக்கமாவே திரும்பி வரணும். அவருக்கும் சிவனுக்கும் நடுவுல போக கூடாது.
சரி எதுக்கு அவர் அங்க உக்காந்துருக்கார்? நல்லா நோட் பன்னனிங்கன்னா தெரியும், சிவனுக்கு படைக்கற அபிஷேக பொருள்கள் லிங்கத்திருமேனி மேல பட்டு வெளில வர்ற இடத்துல தான் சண்டிகேஸ்வரர் இருப்பார். சிவனுக்கு படைக்கும் அணைத்து பொருள்களும் சிவனுக்கு பின் முதலாக ஈஸ்வர பட்டம் பெற்ற சண்டிகேஸ்வரரையே சேரும். அதனால் தான் அவர் அங்கு அமர்ந்திருக்கிறார்.
அபிஷேக பொருள்கள் சரி, சிவன் உடுத்தும் வஸ்திரம் அது என்னாகும். அதையும் சண்டிகேசுவரர் கிட்ட வைக்கறது தான் முறை. அப்படிதான் வச்சுட்டிருந்தாங்க. இந்த வழக்கம் தான் நாளடைவுல நூல் போடுற பழக்கமாயிருச்சு.
சிவன் கோவில்ல குடுக்கற திருநீறு, பூ , பழம் எதுவா இருந்தாலும் சண்டிகேஸ்வரர் முன்னாடி வச்சு பெர்மிஸ்சன் வாங்கிட்டு தான் வீட்டுக்கு எடுத்துட்டு வரனும்.
அடுத்து கை தட்றது. நம்ம எந்த பிரசாதமும் கோவில்ல இருந்து எடுத்துட்டு போகலைன்னா அதையும் அவர்கிட்ட சொல்லனும். அதுக்கு தான் நம்ம கையை அவர்முன்னாடி தட்டி காமிக்கறோம். ஆனா அப்படி தட்டக்கூடாது.
இரண்டு கையையும் சேர்த்து தேய்த்தால் போதும்.
சண்டிகேசுவரரிடம் வேண்டுவதில் சிறப்பு என்னவென்றால் நாம் சென்ற பின்பு சிவனிடம் நம் வேண்டுதலை சொல்வாராம். அதனால் சிவனிடம் வேண்டுவதை சண்டிகேஸ்வரர் காதிலும் போட்டு வைப்பது நல்லது.
அடுத்த பதிவில் சந்திப்போம் !!! நன்றி!!!
ஓம் நம சிவாய!!!

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக