தென்னாடுடய சிவனே போற்றி!!!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!!!
சப்தமகரிஷிகளில் அத்திரியின் புதல்வனான சந்திரன், நவகிரக அந்தஸ்த்து பெற ராஜசூய யாகம் நடத்தும் சூழ்நிலை ஏற்பட்டது. அவன் பிரம்மச்சாரியாக இருக்கும் போது அது இயலாது, அதற்க்கு கிரகஸ்த நிலயை (குடும்பஸ்த நிலை) அடைய வேண்டும்.
குழப்பத்தில் இருந்த சந்திரனுக்கு, காசிப முனிவர் ஓர் உபாயம் சொன்னார். அழகில் சிறந்த சந்திரனின் மீது தட்சனின் மகள்கள் 27பேரும் காதல் கொண்டுள்ளனர் என்றும், அவர்களை சந்திரன் மணந்தால் சிவபெருமானுக்கு மைத்துனன் முறை ஆகலாம் என்றும் கூறி சந்திரனை கல்யானத்திற்கு சம்மதிக்க வைத்தார். திருமணம் நடந்தேறியது.
சந்திரனின் குரு(teacher), தேவகுரு பிரகஸ்பதி ஆவார். தான் நடத்தவிருக்கும் ராஜசூய யாகத்திற்கு அழைத்தும் குரு வராமல் தன் மனைவியான தாரயை மட்டும் அனுப்பி வைத்தார். யாகம், சந்திரனும் அவன் 27மனைவிகளும் சூழ இனிதே நிறைவெறியது. சந்திரன் கிரக பதவியும், அவன் மனைவிகள் 27வரும் 27நட்சத்திர பதவி பெற்றனர். யாக முடிவில் குருவின் மனைவியான தாரை சந்திரனின் அழகில் மயங்கி சில காலம் சந்திரனது இல்லத்தில் தங்கி செல்வதக கோறினாள்.
நாளடைவில் தாரையின் அழகில் மதியிழந்த சந்திரன், தன் குருவின் மனைவி என்பதை மறந்தான். விரைவில் தாரை கருவுற்றாள். இருவரும் சாபத்திற்கு ஆளானார்கள். பத்தினி தர்மத்தை மீறிய தாரை பெண்களின் சாபத்திற்கும், குருபகவானின் சாபத்திற்கும் ஆளானாள். (ஜாதகத்தில் குருவும் சந்திரனும் உள்ள சில பாவ அமைப்புகள் ஜாதகருக்கு/ஜாதகிக்கு மாற்றான் மனைவி/கனவன் உடன் தொடர்பை ஏற்படுத்தும் சிக்கலானவை). சந்திரனுக்கும் தாரைக்கும் பிறந்தவரே புதன் ஆவார்.
முதல் தவறு தன் மனைவியினுடயதால் குரு சந்திரனை சபிக்கவில்லை, பகைத்துக்கொண்டார். ஆனால் விதி விளையாட்டால், நடந்ததை அறிந்த சந்திரனின் 27 மனைவிமார்களும் தன் தந்தை தட்சனிடம் சென்று முறையிட்டனர். தட்சன் தன் மகள்களுக்கு நிகழ்ந்த துரோகத்தை கண்டு சினமுற்று சந்திரனுக்கு சாபம் அளித்தார். சந்திரனானவர் 14 தினம் ஒவ்வொரு கலையாக குறைந்து 15வது தினத்தில் அழிந்து போக சாபமளித்தார்.
சந்திரன் பிரம்மனிடம் சாபவிமோட்சனம் வேண்டினான். தட்சன் தன் மகன் என்பதாலும், அவன் கோபம் நியாயமனது என்பதாலும் உதவ மறுத்துவிட்டார். மகாவிஷ்ணுவின் பரம பக்தன் தட்சன் எனவே விஷ்ணுவும் தட்சனுக்கு எதிராக செயல்பட முடியவில்லை.
இறுதியக 14ம் நாளில் சிவபெருமானின் காலில் விழுந்து வேண்டினான். கருணையே வடிவான சிவபெருமான் ஒளியிழந்த பிறையை எடுத்து தன் தலையில் சூடினார். தட்சனின் சாபம் நியயமானது என்பதால் முழு விமோசனம் தரவில்லை. பதிலாக சந்திரன் 15 நாட்களில் எவ்வாறு தேய்கிராரோ அவ்வாறே வளர்ந்து முழு நிலை அடைவார். இது சுழற்சியாக நடக்கட்டும் என்று சாபவிமோசனம் அளித்தார்.
அன்றிருந்து சிவன் பிறை சூடிய சந்திரசேகரனாக காட்சி தருகிரார்.
காலில் விழுந்தவனை தன் தலையில் சூடிய சிவபெருமானின் கருணை எத்தகயது....!!!
நாமும் அவன் பாதம் பணிந்து முக்தி பெறுவோம்!
ஓம் நம சிவாய!!

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக