தென்னாடுடைய சிவனே போற்றி !!!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி !!!
சனியால் அவதிப்படுவோர் (including myself) சனியின் அருள் பெற வேண்டிய திருத்தலம் ஒன்று உள்ளது. அது எம் மாணிக்கவாசகர் பிறந்த திருவாதவூர் வேதநாதன் திருத்த்தலம் தான்.
சனிக்கும் திருவாதவுருக்கும் உள்ள தொடர்பு என்ன ??
சனிபகவானே அங்கு வந்து வழிபட்ட தலம்... அது என்ன கதைன்னு பாக்கலாம்.
மாண்டல்ய முனிவர் ஒரு சிறந்த தவ யோகி. அவரு ஒரு முறை ஒரு நாட்டின் வெளியில் உள்ள ஒரு காட்டில் தவத்தை தொடங்கினார். பல ஆண்டுகள் தவத்திலேயே அழ்ந்து விட்டார். அப்போ தான் நம்ம ஆளு சனீஸ்வரர் முனிவர் ஜாதகப்படி ஏழரை சனிக்காலத்தில் சஞ்சரிக்கிறார்.
'சும்மா இருந்தா சனியன் புடிக்கும்' அப்டிங்கறத மக்கள் தப்பா புரிஞ்சிக்கறாங்க. சும்மா இருக்கறதுனால சனி பிடிக்கும்னு அர்த்தம் இல்ல. நம்ம எந்த வேலையும் செய்யமா "சும்மா இருந்தாலும்" சனி பிடிப்பார்
சரி, கதைக்கு போகலாம்...
அதே சமயம் அந்நாட்டு அரசரின் கஜானாவில் ஒருநாள் திருடர்கள் நுழைந்தனர். இருப்பதெல்லாம் சுருட்டிக்கொண்டு குதிரையில் தப்பினர். செல்லும் வழியில் திருடிய ஆபரணங்கள் சிதறின. ஒரு இடத்தில் நின்று மூட்டையை நன்றாக கட்டி சென்றனர்.
விடிந்தது..... கஜானா காலியாக இருப்பதை பார்த்த அரசர், தளபதியை அழைத்து "திருடன் எங்கு இருந்தாலும் அவனை ஊர் அறிய கொன்றுவிட்டு நகைகளை திரும்ப கொணருங்கள்" என்று கட்டளையட்டார் .
சிதறிய நகைகளை பின்தொடர்ந்து சென்ற தளபதியும் படையும் ஒரு இடத்தில் நின்றனர். "இதற்கு மேல் நகைகள் இல்லை, திருடன் இங்கே தான் இருப்பான் " என்று தேடினர் .
அங்கே தவம் செய்துகொண்டிருந்த மாண்டல்ய முனிவரின் கழுத்தில் அரசரின் இரத்தின மாலை கிடந்தது . 'கிழே விழ வேண்டிய மாலை சனியின் பார்வையால் முனிவரின் கழுத்தில் விழுந்தது'.
அதை பார்த்த தளபதி முனிவனாக வேடமிட்டு தப்ப திருடன் நடிக்கிறான் என்று எண்ணி முனிவரின் தவத்தை கலைக்க முற்பட்டான். அவரை மரண மேடையில் ஏற்றினான். கத்தி கழுத்தில் பட்டதும் முனிவர் கோபத்தோடு கண் விழித்தார். எதிரில் இருக்கும் கழுமேடை எரிந்து சாம்பலாகியது.
தளபதி தன் தவறை உணர்ந்து காலில் விழுந்து முனிவரின் மேல் இருந்த நகை காரணமாகவே சந்தேகப்பட்டு தவறு செய்தேன் என மன்னிப்பு கேட்டார்.
முனிவர் தன ஞான திருஷ்டியில் கண்டதில் சனிபகவான் தான் காரணம் என அறிந்தார். 'அடே சனியனே ' என்றவுடன் சனி முனிவர் முன் தோன்றினார். "பல காலம் செய்த என் தவத்தை உன் கோர பார்வையால் நாசமக்கிவிட்டாயே உன் கால்கள் முடமாகி கடவது" என சபித்தார்.
உடனே சனிபகவான் கால்கள் முடமாகி கீழே விழுந்தார். தன் மகன் துயர் கண்டு சூரியன் தன் மகனை தாங்கி பிடிக்கிறார். "முனிவரே என் மகன் என்ன பிழை செய்தான் அவன் நீதியை காப்பவன், ஈஸ்வர பட்டம் பெற்றவன். அவன் தன் கடமையை செய்ததற்கு அவனுக்கு இப்பெரும் தண்டனையா" என்றவாறு கேட்க...
முனிவர், "உன் மகன் செய்தது நியாமா ?? பல காலம் செய்த தவத்தை கெடுத்துவிட்டானே" என்றார்.அதற்கு சூரியன் "அது உங்கள் முன்வினைப்பயன் .பாரபட்சம் பாக்ககூடாது என்பதால் தான் என் மகன் கண்ணில் கருப்பு துணி அணிந்திருக்கிறான் . அவனுக்கு நீதியில் நீங்களும் ஒன்றுதான், சிவனும் ஒன்றுதான், சாதாரண மனிதரும் ஒன்றுதான், இவன் இல்லாமல் நவக்கிரக சஞ்சாரம் எவ்வாறு நடக்கும்" என்றார்.
முனிவர் தான் கோபத்தில் அவசரப்பட்டதை உணர்ந்தார். சாப விமோச்சனம் கிடைக்க வேதங்களின் நாயகனான சிவபெருமானை திருவாதவூரில் தரிசிக்க சொன்னார்.
உடனே சூரியன் தன் மகனை தூக்கிக்கொண்டு வாதவூர் வந்தார். அங்கு சனிஸ்வரர் ஈசனை என்னி தவம் இருந்தார். மறைநாதன் சனிக்கு காட்சி தந்து அவரின் முடத்தை போக்கினார். மேலும் "சனீச்வரா..... நீ வந்து தவம் இருந்து வழிபட்ட இந்த தலத்தில் உனக்கும் ஒரு இடம் தருகிறேன். உன் கிரக சஞ்சார பலனால் அவதிப்படுவோர் இத்தலத்திற்கு வந்து வழிபட்டால் அவர்களை நீ சோதிக்க கூடாது" என்று கூறி சனிக்கு தனி சன்னதி தந்தார் .
ஏழரை சனி, கண்ட சனி, அஷ்டமச்சனி இருக்கறவங்க எல்லாரும் திருவாதவூருக்கு போய் வேதநாதனை வணங்கி அவன் அருள் பெற வாழ்த்துக்கள்
நானும் அவனைக்கான கிளம்பிக்கொண்டிருக்கிறேன்....... :)
ஓம் நம சிவாய !!!

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக