ஞாயிறு, 30 ஆகஸ்ட், 2015

நான் வைகுண்டம் போவேனா ??

வணக்கம்........

ஒருமுறை  வியாசர் அவரோட சீடர் 'கனகதாசன்' கிட்ட ஒரு கேள்வி கேட்டார்.

"கனக தாசா...!! நம்முள் யார் வைகுண்டம் போவார்கள் ??" என கேட்டார் . கனக தாசர் பதில் கூறவில்லை. பின் ஒவ்வொரு சீடனாக கை காட்டி "இவன் வைகுண்டம் போவானா?" எனக்கேட்டார். அனைவருக்கும்  கனகதாசன் "இல்லை" என பதிலளித்தார் .

பின் வியாசர் "நான் வைகுண்டம் போவேனா?" என கேட்டார். அதற்கும் கனக தாசர் "இல்லை" என கூறினார் .

சீடர்கள் அனைவரும் கனக தாசன் மீது ஆத்திரம் கொண்டனர். அனால் வியாசர் பொறுமையாய், "சரி , நீ வைகுண்டம் போவாயா?" எனக்கேட்டார் .

அதற்க்கு கனக தாசன் "நான் போனால் போவேன் " என்று பதிலளித்தார். இதைக்கேட்ட சீடர்களின் கோபம் அதிகமாயிற்று . ஒரு சீடன் எழுந்து "கனக தாசா  குருவிடம் நீ பேசும் வார்த்தை தகாதவை " என்று கண்டித்தான் .


வியாசர் அவனை அமர்த்தி விட்டு பொறுமையாய் " கனக தாசா எவ்வாறு கூறுகிறாய்?" என கேட்டார்.   

அதற்க்கு கனகதாசன் "குருவே, நான் அளித்த பதில், "நான் " என்னும் அகந்தை என்னை விட்டு போனால் நான் வைகுண்டம் போவேன்" என்று கூறினார்.  

அப்போது தான் சீடர்களுக்கு விளங்கியது . 


எனவே "நான்" என்னும் அகந்தையை விட்டு இறைவனடி சேரும் வழியை தேட வேண்டும்...   

சனி, 29 ஆகஸ்ட், 2015

சனியின் முடமான கால்களை திரும்ப தந்த திருவாதவூர் வேதநாதன்!!

தென்னாடுடைய சிவனே போற்றி !!!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி !!!




சனியால் அவதிப்படுவோர்  (including myself) சனியின் அருள் பெற வேண்டிய திருத்தலம் ஒன்று உள்ளது. அது எம் மாணிக்கவாசகர் பிறந்த திருவாதவூர் வேதநாதன் திருத்த்தலம் தான்.

சனிக்கும் திருவாதவுருக்கும் உள்ள தொடர்பு என்ன ??


சனிபகவானே அங்கு வந்து வழிபட்ட தலம்... அது என்ன கதைன்னு பாக்கலாம்.

மாண்டல்ய முனிவர் ஒரு சிறந்த தவ யோகி. அவரு ஒரு முறை ஒரு நாட்டின் வெளியில் உள்ள ஒரு காட்டில் தவத்தை தொடங்கினார். பல ஆண்டுகள் தவத்திலேயே அழ்ந்து  விட்டார். அப்போ தான் நம்ம ஆளு சனீஸ்வரர் முனிவர் ஜாதகப்படி ஏழரை சனிக்காலத்தில் சஞ்சரிக்கிறார்.

'சும்மா இருந்தா சனியன் புடிக்கும்' அப்டிங்கறத மக்கள்  தப்பா புரிஞ்சிக்கறாங்க. சும்மா இருக்கறதுனால சனி பிடிக்கும்னு  அர்த்தம் இல்ல. நம்ம எந்த வேலையும் செய்யமா "சும்மா இருந்தாலும்" சனி பிடிப்பார்

சரி, கதைக்கு போகலாம்...

அதே சமயம் அந்நாட்டு அரசரின் கஜானாவில் ஒருநாள் திருடர்கள் நுழைந்தனர். இருப்பதெல்லாம் சுருட்டிக்கொண்டு குதிரையில் தப்பினர். செல்லும் வழியில் திருடிய ஆபரணங்கள் சிதறின. ஒரு இடத்தில் நின்று மூட்டையை நன்றாக கட்டி சென்றனர்.

விடிந்தது..... கஜானா காலியாக இருப்பதை பார்த்த அரசர், தளபதியை அழைத்து "திருடன் எங்கு இருந்தாலும் அவனை ஊர் அறிய  கொன்றுவிட்டு நகைகளை திரும்ப கொணருங்கள்" என்று கட்டளையட்டார் .

சிதறிய நகைகளை பின்தொடர்ந்து சென்ற தளபதியும் படையும் ஒரு இடத்தில்  நின்றனர். "இதற்கு மேல் நகைகள் இல்லை, திருடன் இங்கே தான் இருப்பான் " என்று தேடினர் .

அங்கே தவம் செய்துகொண்டிருந்த மாண்டல்ய முனிவரின் கழுத்தில் அரசரின் இரத்தின மாலை கிடந்தது . 'கிழே விழ வேண்டிய மாலை சனியின் பார்வையால் முனிவரின் கழுத்தில் விழுந்தது'.

அதை பார்த்த தளபதி முனிவனாக வேடமிட்டு தப்ப திருடன் நடிக்கிறான் என்று எண்ணி முனிவரின் தவத்தை கலைக்க முற்பட்டான். அவரை மரண மேடையில் ஏற்றினான். கத்தி கழுத்தில் பட்டதும் முனிவர் கோபத்தோடு கண் விழித்தார். எதிரில் இருக்கும் கழுமேடை எரிந்து சாம்பலாகியது.

தளபதி தன் தவறை உணர்ந்து காலில் விழுந்து முனிவரின் மேல் இருந்த நகை காரணமாகவே சந்தேகப்பட்டு தவறு செய்தேன் என  மன்னிப்பு கேட்டார்.

முனிவர் தன ஞான திருஷ்டியில் கண்டதில்  சனிபகவான் தான் காரணம் என அறிந்தார். 'அடே  சனியனே ' என்றவுடன் சனி முனிவர் முன் தோன்றினார். "பல காலம் செய்த என் தவத்தை உன் கோர பார்வையால் நாசமக்கிவிட்டாயே உன் கால்கள் முடமாகி கடவது" என சபித்தார்.

உடனே  சனிபகவான் கால்கள் முடமாகி கீழே விழுந்தார். தன்  மகன் துயர் கண்டு சூரியன் தன்  மகனை தாங்கி பிடிக்கிறார். "முனிவரே என் மகன் என்ன பிழை செய்தான் அவன் நீதியை காப்பவன், ஈஸ்வர பட்டம் பெற்றவன். அவன் தன் கடமையை செய்ததற்கு அவனுக்கு இப்பெரும் தண்டனையா" என்றவாறு கேட்க...

முனிவர், "உன் மகன் செய்தது நியாமா ?? பல காலம் செய்த தவத்தை கெடுத்துவிட்டானே" என்றார்.அதற்கு சூரியன்  "அது உங்கள் முன்வினைப்பயன் .பாரபட்சம் பாக்ககூடாது என்பதால் தான் என் மகன் கண்ணில் கருப்பு துணி  அணிந்திருக்கிறான் . அவனுக்கு நீதியில் நீங்களும் ஒன்றுதான், சிவனும் ஒன்றுதான், சாதாரண மனிதரும் ஒன்றுதான், இவன் இல்லாமல் நவக்கிரக சஞ்சாரம் எவ்வாறு நடக்கும்"  என்றார்.

முனிவர் தான் கோபத்தில் அவசரப்பட்டதை உணர்ந்தார். சாப விமோச்சனம் கிடைக்க வேதங்களின் நாயகனான சிவபெருமானை திருவாதவூரில் தரிசிக்க சொன்னார்.

உடனே சூரியன் தன்  மகனை தூக்கிக்கொண்டு வாதவூர் வந்தார். அங்கு சனிஸ்வரர் ஈசனை என்னி  தவம் இருந்தார். மறைநாதன் சனிக்கு காட்சி தந்து அவரின் முடத்தை போக்கினார். மேலும்  "சனீச்வரா..... நீ வந்து தவம் இருந்து வழிபட்ட இந்த தலத்தில் உனக்கும் ஒரு இடம் தருகிறேன். உன் கிரக சஞ்சார பலனால்  அவதிப்படுவோர் இத்தலத்திற்கு வந்து வழிபட்டால் அவர்களை நீ சோதிக்க கூடாது" என்று கூறி சனிக்கு தனி சன்னதி தந்தார் .


ஏழரை சனி, கண்ட  சனி, அஷ்டமச்சனி இருக்கறவங்க எல்லாரும் திருவாதவூருக்கு போய்  வேதநாதனை வணங்கி அவன் அருள் பெற வாழ்த்துக்கள்

நானும் அவனைக்கான கிளம்பிக்கொண்டிருக்கிறேன்....... :)


ஓம்  நம சிவாய !!!
  

வெள்ளி, 28 ஆகஸ்ட், 2015

வரலட்சுமி விரதம் இன்று

இன்று வரலட்சுமி  விரதமும் திருவோண விரதமும் ஒரே நாளில் ..........




அம்மா வரலக்ஷ்மி விரதத்துக்கு போயிருக்காங்க.......


வரலக்ஷ்மி விரதம் ஆவணி மாதத்தில் பௌர்ணமிக்கு முன்னால் வரும் வெள்ளிக்கிழமையில் அனுஷ்டிப்பார்கள். திருவோண விரதம் ஆவணி மாதத்தில் வரும் திருவோண நட்சத்திர  நாளில் அனுஷ்டிப்பார்கள்.

இந்த இருவிரதமும் உடல் மற்றும் மன தூய்மையை அடிப்படையாய் கொண்டு இருக்கும் விரதங்கள்.

பத்ரச்ரவன் என்ற மன்னனின் மனைவி கசந்திரிகா. இவள் மிகவும் தெய்வீகமான தூய்மை உடையவள். தன்னையும் தன் இருப்பிடத்தையும் தூய்மையாக வைத்துகொள்பவள் . அழகு,அறிவு ,கற்பு, கல்வி ,குணம்  அனைத்திலும் சிறந்த அவளுக்கு சியாமா என்ற பெண் குழந்தை பிறந்தது.
அவளைப்போன்றே சியமாவையும் வளர்த்தாள்.

கசந்த்ரிகாவின்  தூய்மையிலும் பக்தியிலும் கருணை கொண்ட மகாலட்சுமி  ஒரு ஆவணி வெள்ளிகிழமையில் சுமங்கலி ரூபம் கொண்டு கசந்த்ரிகாவின் அரண்மனைக்குள் சென்றாள் . அங்கு நன்றாக சாபிட்டுவிட்டு தாம்பூலத்தை சுவைதுக்கொண்டிருகும் சந்திரிகா சுமங்கலியை பார்த்து என்ன வேண்டும் என கேட்டாள் . அதற்கு மகாலட்சுமி "கசந்திரிகா ,இன்று மகாலட்சுமி அவதரித்த நாள் இன்று விரதமிருந்தால் மகாலட்சுமி வீட்டில் வாசம் செய்வாள்."  என்று கூற, தன்  அந்தபுரத்திற்கு வந்து தன செயலில் குறை கூறும் சுமங்கலியிடம் கோபம் கொண்டாள்  ராணி. அவளை கடும்  சொற்கள் கூறி வீட்டை விட்டு வெளியேற்றினாள்.  மகாலட்சுமி அழுதுகொண்டு வெளியே  வந்ததை  கண்ட இளவரசி சியாமா , அவளிடம் காரணம் கேட்டாள் . அதற்கு மகாலட்சுமி நடந்ததை கூறினாள் . சியாமா "என்னிடம் விரதம் இருக்கும் முறையை கூறுங்கள் நான் அனுஷ்டிக்கிறேன்" என்று கூறினாள் .

மகாலட்சுமி மனம் மகிழ்ந்து சியாமாவிடம் விரத முறையை கூறி சென்றாள் . சியாமா வரலட்சுமி  விரதம் இருந்து வந்தாள். அவளுக்கு திருமணம் ஆனது . இவள் சென்றதும் புகுந்த வீடு செல்வ செழிப்புற்றது. ஆனால் அவள் சென்றதும் பத்ரச்ரவனனின்  நாடு வளம் குன்றி போரில் நாட்டை பறிகொடுத்தான் . கணவனும் மனைவியும்  ஊர் ஊராக சுற்றினார்கள்.
சியமாவிடம் உதவி கேட்டனர்.

சியாமா ஒரு பானை நிறைய பொற்காசுகளை கொடுத்து இதை வைத்து வாழ்க்கை நடத்துமாறு கூறினாள் .  ஆனால், அதை கசந்த்ரிகா திறந்தபோது வெறும் கரிதுண்டுகளே இருந்தன. இதை அறிந்த சியாமாவுக்கு தன்  தாய் ஒருமுறை மகாலட்சுமியை அவமானப்படுத்தியது நினைவிற்கு வந்தது. தன் தாயை அழைத்து நடந்ததை கூறி மகாலட்சுமி சொன்ன விரத முறைகளை கூறினாள் . கசந்த்ரிகா தன தவறை உணர்ந்து விரதம் மேற்கொண்டாள் . அஷ்டலட்சுமியின் அனுகிரகத்தால் இழந்த நாடு திரும்ப பெற்று சுக போகங்களை அனுபவித்து வாழ்ந்தனர்.


இந்த விரதமே வரலட்சுமி விரதமாக கொண்டாடப்படுகிறது. இந்த விரதம் மேற்கொள்வதால், சுமங்கலிப்பெண்கள் கணவன் ஆயுள் கூடும். கன்னிப்பெண்களுக்கு நல்ல கணவன் அமைவான் . குழந்தை இல்லாதவர்க்கு சந்தான லட்சுமியின் அருளலால் குழந்தை செல்வம் வந்துசேரும். வீட்டில் அனுஷ்டித்தால் மகாலட்சுமி வீட்டில் வந்து வாசம் செய்வாள்.


ஓம் நம சிவாய !!!



வியாழன், 27 ஆகஸ்ட், 2015

பகீரதனும் கங்காதரனும் - "ஈசன் முடி தொடுவது எனக்கு கிடைத்த பெரும் பாக்கியம்"

தென்னாடுடய சிவனே போற்றி!!!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!!!!



‘கங்கையில் குளித்தால் பாவம் போகும், பிறவி பிணி தீரும்’ என்று சொல்வார்கள். அது ஏன் கங்கையில் மட்டும்? பிரம்மனாலும் காண முடியாத சிவனின் முடியில் அவள் எவ்வாறு அமர்ந்தாள்??

சரி வாங்க ஸ்டோரிக்கு போகலாம்..... :)

சகர மன்னன் அஸ்வமேத யாகம் நடத்தி இந்திர பதவியை அடைய வேண்டும் என எண்ணினான் .  அதற்க்கு தேவையானவைகளை தயார் செய்தான் . அது என்னப்பா  அஸ்வமேத யாகம்னு  கேக்கறிங்களா ???

அஸ்வமேத யாகம் நடத்தி யாகத்தின் முடிவில்  பட்டத்து குதிரையை ('அஸ்வம்' என்றால் குதிரை)  அவிழ்த்து விடுவார்கள். அது எந்த நாட்டுக்கு செல்கிறதோ அந்த நாட்டின் மன்னன்  நாட்டை ஒப்படைக்க வேண்டும் அல்லது குதிரையை சிறைபிடித்து போர் புரிய வேண்டும்.

இவ்வாறு 100 அஸ்வமேத யாகங்கள் முடித்தால் 'இந்திர பதவி' கிட்டும் . சகர மன்னன்  99 யாகங்களை முடித்தான் . 100வது  யாகம் நடந்தால்  பதவி பறிபோகும் என்ற  பயத்தில்  இந்திரன் சூழ்ச்சி  செய்தான். 100வது யாகம் நடந்துகொண்டிருக்கையில்  கட்டி வைத்திருந்த பட்டத்து  குதிரையை அவிழ்த்து கொண்டு சென்று கபில முனிவரின் ஆசிரமத்தில் தவம் செய்து  கொண்டிருந்த கபிலரின் பின்னால் கட்டிவிட்டு மறைந்துவிட்டான் இந்திரன் .

யாகம் முடியும் நேரத்தில்  குதிரையை காணவில்லை . சகர மன்னனின் மகன்கள்  மிக பலசாலிகள் . அவர்களை அனுப்பி குதிரையை மீட்டு வருமாறு மன்னன் கட்டளையிட்டான் . அவர்களும்  குதிரையை தேடி செல்கிறார்கள் . கபிலரின் ஆசிரமத்தில் குதிரையை கண்டு, தவத்தில் இருக்கும் கபிலரிடம் 'குதிரையை கொண்டு வந்து மன்னரிடம் கொடுத்து காலில் விழுந்து மன்னிப்பு கேள் அல்லது இப்போது எங்களுடன் போரிடு " என்றனர். கபிலர் தன தவத்தில் அசயக்கூட  இல்லை. கோபமடைந்த சகர குமாரர்கள் கபிலரின் தொடையில் கத்தியால் கீறினர். அதற்கும் அசரவில்லை . கபிலரை தூக்கி நிலத்தில் அடித்தனர்  அவர் தவம் கலைந்தது.

கோபத்தில் கபிலர்  பார்த்தவுடன்  சகர குமாரர்கள் எரிந்து சாம்பலாகினர் . இதை கேள்விப்பட்ட சகர மன்னனும்  தன்  மகன்களை இழந்த துக்கத்தில் யாகத்தீயில்  குதித்து  தன உயிரை போக்கிகொண்டான்.


சில காலம் கழித்து சகர வம்சத்தில் பகீரதன் என்ற மன்னன் பிறந்தான். 
அவன் நாடு வறுமைக்குள்ளானது. அப்போது நாரதர் அவனிடம் வந்து நடந்ததை கூறி  அவனது துயருக்கு காரணம் சாந்தி அடையாத அவனின் முன்னோர்களின் ஆன்மாதான் என்பதை விளக்கி கூறினார்.

இதற்க்கு உபயம் கேட்ட பகீரதனிடம், கங்கை சத்திய லோகத்தில் இருக்கிறாள் அவளுக்குள் உன் முன்னோர்களின்  சாம்பல் கரைந்தால் மட்டுமே உனக்கு பித்ரு தோஷம் நீங்கி அவர்களுக்கு முக்தி கிட்டும்  என்றும் கங்கா தேவியை எண்ணி தவம்  இருக்க சொன்னார் .

பகீரதனும் தன முன்னோர்கள் நன்மைக்காகவும்,ம் மக்கள் நன்மைக்காகவும் தவமிருந்தான். கங்கா தோன்றினாள். அவளிடம் பூமியில் பிரவேசிக்கும்படி வேண்டினான். ஆனால் கங்கை மறுத்தாள். அவளின் வேகம் மொத்த உலகத்தையும் அழிக்கும் சக்தியுடையது என்றும் ஈசனிடம் இதற்கு உபாயம் கேட்க கூறி மறைந்தாள் .


பகீரதன் ஈசனை நோக்கி தவம் இருந்தான். ஈசனும் காட்சியளித்து ஒரு உபாயம் கூறினார். கங்கையின் வேகத்தை கட்டுபடுத்த கூடிய ஆற்றல் தனக்கு மட்டும் உள்ளதாகவும் தன ஜடாமுடியின் வழியில் கங்கா  இறங்கினால் அவளின் வேகம் கட்டுக்குள் வரும் என்றார். பகீரதனும் கங்கையிடம் இதை கூறினான். "ஈசன் முடி தொடுவது எனக்கு கிடைத்த பெரும் பாக்கியம்" என்று கூறி உலகில் பிரவேசிக்க ஒப்புக்கொண்டாள் .

சிவபெருமான் இமயத்தின்  உச்சியில் நின்று தன்  ஜடாமுடியை அவிழ்க்க, அதில் கங்கா தேவி பிரவேசித்து தன்  வேகம் கட்டுப் படுத்தப்பட்டு  பூமியில் பாய்ந்தாள். நிலங்களை வளமாக்கி பகீரதனின் முன்னோர்களின் முக்திக்கும் வழி செய்தாள்.  கங்கை புனிதமான நதி என்பதால், அதை தவ வலிமையால் உலகிற்கு கொண்டு சேர்த்த பகீரதன் பெயரையே கங்கை முதலில் பிரவேசித்த இடத்திற்கு சூட்டினார் சிவன். 

கங்கையின் புனிதம் மாறாமல் இருந்து உலக மக்களின் நன்மை தொடர கங்கை எப்பொழுதும் தன்  தலையில் இருப்பதே நல்லது என்று ஏற்றார் . அன்றிலிருந்து கங்காதரனாக காட்சியளிக்கிறார் .

கங்கையில் குளித்தால் பாவம் போக்கி புண்ணியம் தரும்,

ஓம்  நம  சிவாய !!!


திங்கள், 24 ஆகஸ்ட், 2015

அஷ்டமியில் ஆகாதாம்!!! நவமியில் நல்லதில்லயாம்!!! யாருக்கு???

தென்னாடுடைய சிவனே போற்றி!!!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!!!


“ஏம்ப்பா இன்னைக்கு அஷ்டமி இன்னைக்கா கார் வாங்க போற?!!” “நவமி முடிஞ்சு நல்ல காரியம் பன்னிகலாம்பா” இப்படியெல்லம் பேச்சுவழக்கில் கேட்டிருக்கிறோம்.

அதென்ன அஷ்டமி, நவமி?

அது வேற ஒன்னும் இல்ல, பெளர்ணமி அமாவாசைக்கு 8ஆம் நாள் அஷ்டமி, 9ம் நாள் நவமி. சந்திரனின் ஒரு நிலை (வளர்ந்த அல்லது தேய்ந்த) தான் அது. திதி என்றும் சொல்வார்கள்.

ஒவ்வொரு திதிக்கும் ஒரு தேவதைகள் உண்டு. மனிதர்கள் எப்பொழுதும் அஷ்டமி, நவமி திதியை விலக்கி மற்ற திதிகளில் யாகம், திருமணம் முதலான நல்ல காரியங்களை நடத்தி வந்தனர். இதைப் பொறுக்காத அஷ்டமியும், நவமியும் சந்திரனிடம் முறையிட்டனர்.

“அடப்போங்கப்பா, உங்களுக்கு மட்டுமா பிரச்சனை!! எனக்கும்தான். அஷ்டமி நவமிகளில் நல்லகாரியம் செய்யாததனால். எனக்கும் சக்தி குறைந்துவிடுகிறது” என்று புலம்பினான் சந்திரன்.

படைத்த பிரம்மாவிடம் சென்று கேட்டனர்.

“பிரம்ம தேவரே, எங்கள் இருவரையும் ஏன் மக்கள் கொண்டாடுவதில்லை? நாங்கள் என்ன தவறு செய்தோம், ஏன் வேதங்களில் அஷ்டமி நவமியை சுப காரியங்களுக்கு ஒதுக்கவில்லை?” என்று சரமாரியாக கேள்வி கேட்டனர். அதற்கு பிரமன், ஒரு காரணத்திற்காகவே இது வகுக்கப்பட்டுள்ளது என்றும், திருமாலிடம் இதை கேளுங்கள் என்று சஸ்பன்ஸ் வைத்து அனுப்பினார்.

நேராக திருமாலிடம் சென்று அதே கேள்வியை கேட்டனர். அதற்க்கு நாராயணர், நீங்கள் கவலைப்படத் தேவயில்லை. அஷ்டமி, நவமி இந்த இரண்டு திதிகளும் மற்ற திதிகளை விட அதிக முக்கியத்துவம் பெறும் நாள் நெருங்கிவிட்டது என்றார். தேவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை.

திரும்ப புலம்பினர். ”உங்கள் திதிகள் ஆகாதவைகள் தான், ஆனால் மக்களுக்கு அல்ல. அராஜகம் செய்யும் அரக்கர்களுக்கு. திரேதா யுகத்தில் நான் ராமாவதாரம் செய்யப்பொகும் நாள் நவமி திதியாகும். அன்று ராவனாசுரனின் அழிவு நிச்சயிக்கப்படும். அதேபோல் துவாபர யுகத்தில் நான் அஷ்டமி திதியில் கிருஷ்ணாவதாரம் செய்வேன். அன்று பிறந்து துஷ்ட கம்சனை வதைப்பேன். இந்த இரண்டு நாட்களும் ‘ராமநவமி’,’கோகுலாஷ்டமி’ என்று திதிகளாகிய உங்கள் பெயர் கொண்டே சிறப்பாக கொண்டாடப்படும்” என்று கூறினார் நாராயணர்.

அதே போன்று நிகழ்ந்தது. இதன் காரணம் மற்றைய நாட்களில் தனது நலத்திற்காகவே நல்ல காரியம் செய்யும் மனிதன் இந்த இரண்டு திதிகளிலாவது கடவுளை வணங்கட்டும் என்ற நோக்குடனே இது நிகழ்ந்தது.

மேலும் துர்க்காஷ்டமி, அஷ்டமி நாளில் பைரவர் வழிபாடு ஆகியன சிறப்பாகும்.

ஓம் நம சிவாய!!

யாரும் நீதிமான் சனிஸ்வரரிடம் தப்ப முடியாது!!!


தென்னாடுடய சிவனே போற்றி!!!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!!!




ராவணன்னு சொன்னாலே சின்ன குழந்தைல இருந்து பெரியவங்க வரை தெரியாதவங்க யாரும் இல்லை....

”ராவணன் ரொம்ப மோசமானவன், அரக்கன்” இப்படியெல்லாம் சொல்லிதான் ராமயண கதை சொல்லுவாங்க... எனக்கும் சின்ன வயசுல அப்படித்தான் கதை சொன்னாங்க......

ஆனா உன்மை என்ன?? ராவணன் பல வருஷம் வாழ்ந்தப்போ ஏன் அவன் அரக்கனா தெரியல?? ராமகாதையில் மட்டும் ஏன் அவ்வாறு நடந்துகொண்டான்???

ஓகே.... லெட்ஸ் ஸ்டார்ட் த ஸ்டோரி.....!! :) :)




ராவணன் உண்மையில் ஒரு சிவ பக்தன். ஒரு சிவ பக்தன் மட்டும் இல்லை ‘திரு சிவ பக்தன்’. அதாவது, சிவபக்தர்களில் சிறந்தவன். அவனது நகரமான இலங்கைதான் உலகில் செல்வ செழிப்போடு இருந்தது. இலங்கை மக்கள் அனைவரும் அனைத்து வசதிகளோடு இருக்க செங்கோலாட்சி நடத்தி வந்தான். வாரி வழங்கும் வள்ளல்.

ஒரு சிவலிங்கத்தை கூட அசைக்கமுடியாத அரக்கர்கள் மத்தியில் எம்பெருமான் வாழும் கயிலாய மலையை பெயர்த்து எடுத்தவன் ராவணன். பூரண சிவபக்தியில்லமல் இது முடியுமா?? கயிலாயத்தில் ஒரு புல்லைக்கூட அசைக்க முடியாது.



இத்தகய சிவ பக்தன் எவ்வாறு வழிமாறி சென்றான்???

ராவணன் இப்பிறவியில் என்னதான் சிற்ந்து இருந்தாலும், முற்பிறவியில் செய்த சில கர்மங்களுக்கு பதில் சொல்ல வேண்டுமல்லவா!!!

பிறந்ததிலிருந்து ராஜ வாழ்க்கையை அனுபவித்த அவனுக்கு, கர்மங்களை வினையாக்கும் நவகிரகங்களால் தீமை வரவுள்ளது என்று அறிந்தான்.மேழும் நவகிரகங்களை பிடித்தால் தன் நாட்டு மக்களின் விதியையும் மாற்றலம் என்றுணர்ந்தான். உடனே தன் தவ வலிமையாலும், பக்தியின் சிரத்தையாலும் நவகிரகங்களான சூரியன்,சந்திரன்,புதன்,சுக்கிரன்,செவ்வாய், குரு, சனி, ராகு, கேது ஆகிய எல்லோரயும் தன் கட்டுக்குள் கொண்டு வந்தான்.

அவன் விருப்பம் போலவே அனைத்தும் நடந்தது. தன் பராக்கிரமத்தை உலகிற்கு காண்பிக்க. உலகை இயக்கும் கருவிகளான நவகிரகங்களை தன் அரியனயின் கீழ் படுக்கச்செய்து அவர்களை படியாக்கி தினமும் அவர்கள் மீது ஏறி அரியனையில் அமர்வான்.

இவ்வாறு காலங்கள் சென்றன. ராவணனும் தன் ஊழ்வினைப்பயனை அனுபவிக்காமல் வாழ்ந்து வந்தான். தேவர்கள் நாரதரை உதவச்சொல்லி வேண்டினர்.

நாரதருக்கு இந்தமாறி வேலையெல்லம் சொல்லியா குடுக்கனும்.. :)

ராவணன் சபைக்கு சென்றார் நாரதர். அங்கே நவகிரகங்களின் மீது ராவணன் ஏறிச்சென்று அரியனையில் அமர்வதை கண்டார்.  அதில் அனைத்து கிரகங்களும் மேல்நோக்கி படுத்திருந்தனர் சனீ’ஸ்வரர்’ மட்டும் பூமியை நோக்கி படுத்திருதார். ராவணனும் இதை ஒரு பொருட்டாக எடுட்துக்கொள்ளவில்லை. இதைப்பார்த்த நாரதருக்கு வந்த வேலை சுலபமாயிருச்சு... :)

ராவணனிடம், 8 கிரகங்களும் உன்னை மதித்து மேல்நோக்கி படுத்திருக்கயில் சனீஸ்வர் மட்டும் எதிர்திருக்கிரார் என்னே அவரது துணிவு என்று சனிபகவானை புகழாரம் பாடினார்.

இதை கேட்ட ராவணன் சும்மா இருப்பானா!! ‘சனீஸ்வரரே நாளை முதல் நீரும் எம்மை வணங்கியவாரே மேல்நோக்கி படுக்க வேண்டும்’ என்று கட்டளையிட்டான். தன் பார்வையின் பலமறிந்த சனீஸ்வரர் கீழ் குனிந்தபடி மறுத்தார். எனினும் ராவணன் அவரை விடவில்லை.

வேறுவழியின்றி சனிபகவான் மேல்நோக்கி படுத்தார். ராவணன் ஏறும்போது சனியின் மார்பில் காலை வைத்தான். சனியின் பார்வை நேராக ராவணன் மேல் விழுந்தது.

தர்மத்தை காக்கும் கர்மகாரகன் சனீஸ்வரர். அவர் பார்வை பட்டதும் ராவணனின் கர்மவினைகள் அவனை வந்து சூழ்ந்துகொண்டன.

ராவணன் பலம் குன்றினான். முற்பிறவிக்கேற்ப செயல்கள் நிகழத்தொடங்கின. அக்ந்தை அவனை ஆட்கொண்டது. அது ஒன்று போதுமே அவன் வீழ்ச்சிக்கு. பின் நடந்தவயெல்லாம் தான் ராமாயணம்.

எனினும் சிறந்த சிவ பக்தனானதால் அவனுக்கு நாராயணரின் அவதாரமான ராமர் கையால் மரணம் ஏற்பட்டு முக்தியடைந்தான்.

சனிபகவான் கர்மகாரகனாவார். நாம் முற்பிறவியில் செய்த வினைகள் யாவும் இப்பிறவியில் சனிபகவானால் தான் நமக்கு அளிக்கப்படுகிறது. செய்த செயலுக்கு பலன் அனுபவித்தே தீரவேண்டும். நல்லதாய் இருந்தால் நல்லது தீயதாய் இருந்தால் தீயது. யாரும் நீதிமான் சனிஸ்வரரிடம் தப்ப முடியாது.


ஓம் நம சிவாய!!






வெள்ளி, 21 ஆகஸ்ட், 2015

சித்தர்கள் மனிதர்களுக்கு அருள எளிதில் ஏன் வருவதில்லை?

தென்னாடுடய சிவனே போற்றி!!!!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!!!


சித்தர்கள் ஏன் மனிதர்கள் முன்னால் வருவதில்லை??? வந்து மனிதனின் நன்மைக்காக தங்கள் அட்டமாசித்திகளை பயன்படுத்தலாமே!!!  வந்தால் என்ன ஆகும்???


இந்த கேள்விக்கான பதில் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே நிகழ்ந்த ஒரு சம்பவத்தை உங்களுக்காக கூறுகிறேன்.

பலகாயக்கலை என்று சொல்லப்பட்ற கூடு விட்டு கூடு பாய்கின்ற கலை சித்தர்களுக்கே உரியது. 18 சித்தர்களும் இதில் கைதேர்ந்தவர்கள். அவர்களுள் ஒருவர் திருமூலர் (எல்லோரும் நன்கு அறிந்த திருமந்திரத்தை இயற்றியவர் தான்). அவர் மக்கள் நன்மைக்காக களமிறங்கியதில் என்ன ஆயிற்று தெரியுமா??

சொல்கிறேன் கேளுங்கள்!!



திருமூலர் ஒருமுறை ஆகாய மார்க்கமாக சதுரகிரி மகாலிங்கத்தை தரிசிக்க சென்றுகொண்டிருந்தார். அப்போது ஆகாய மார்க்கமாக வந்த ஒரு அரைசித்தர் (சித்திகளில் முழுமை அடையாதவர், உப சித்தர் என்றும் கூறலாம்) திருமூலரை வணங்கி நின்றார். அவர் முகம் வாடியிருந்தது. அதை கண்ட திருமூலர், காரணத்தை வினவினார். உபசித்தர் திருமூலரிடம், சித்தராய் இருப்பது ஆனந்தம் அளித்தாலும் நம்மால் மக்களுக்கு எந்த பயனும் இல்லையே, சித்தர்கள் ஏன் மக்களின் துயரம் போக்க முன்வருவதில்லை??
‘மக்களின் சேவயே மகேசன் சேவை’யல்லவா!!! என்றெல்லாம் புலம்பினார்.


உபசித்தர் குழப்பத்தில் உள்ளார். முழு சித்தர் அகாததே இதற்கு காரணம் என்பதை தன் ஞானத்தால் கண்டார் திருமூலர்.  ஏனெனில்  முழுமையடந்த சித்தன் கவலை,துக்கம்,மகிழ்ச்சி முதலானவற்றை கடந்தவன். உபசித்தருக்கு இந்த எண்ணம் தோன்ற காரணம் யாதோ என கேட்டார் திருமூலர்.


 அதற்கு அவர் இந்த நாட்டின் மன்னன் தன் இளவயதிலே அற்ப ஆயுளால் வேட்டைக்கு சென்று அரவு (பாம்பு) தீண்டி இறந்து கிடப்பதை பாருங்கள் என்று காட்டினார். இவனுக்கு வாரிசு இல்லை. சில தினங்களில் எதிர் நாட்டு அரசன் போர்தொடுத்து வரவுள்ளான். இந்நாட்டை யார் காப்பது. சித்தர்கள் நாம் ஏன் இதை நம் கடமயாக கொள்ள கூடாது  என்றவாறு கேட்டார்

திரிகால ஞானியான திருமூலர் நடக்கவிருப்பதை அறிந்தும் எதுவும் அறியாதவர் போல உதவலாமே என ஒப்புகொண்டு, விஷமேறிய அந்த அரசன் உடலை மூலிகயால் சுத்தப்படுத்தி தனது பலகாய சித்தியினால் அரசன் உடல் புகுந்தார். தனது பிறப்பு உடலை சதுரகிரியின் மலையில் ஒரு குகையினுல்
மறைத்து வைத்தார். அரசனாகி மாளிகைக்கு சென்றார். மக்களுக்கான நற்பனிகளை செய்தார்.

அரசனுக்கோ புதிதாக திருமணம் முடிந்திருந்தது. அரசன் மனைவி தன்னிடம் நெருங்கும்பொதெல்லம் விலகிச்சென்றார் திருமூலர். அரசரின் நடவடிக்கயில் மாற்றம் தெரிவது கண்டு அவரிடம் அவள் கேட்டதில் திருமூலர் நடந்ததை கூறினார். மக்களின் நன்மைக்காகவே நான் உன் கனவன் உடல் ஏந்தியிருக்கிறேன் என்றும், போர் முடிந்ததும் நல்லதகுதியனவனை அரசனாக்கிவிட்டு இவ்வுடலை விட்டு பிரிந்து விடுவதகவும் கூறினார். இதை கேட்ட அரசனின் மனைவி அதிர்ச்சியுற்றாள். அழுது புலம்பினாள்.

ஊர் அரிய தான் விதவை கோலமுறுவதை என்னி அச்சமடைந்தாள். அது நடவாமலிருக்கவும் அரசு அழியாமல் இருக்கவும் ஒரு உபாயம் தேடினாள். திருமூலரின் உன்மயான உடலை அழித்துவிட்டால் அவர் இங்கேயே தங்கி விடுவார் என எண்ணி ஆட்களை அனுப்பி அவரின் உடலை கண்டுபிடித்து தீயில் சுட்டு எரித்தாள்.

தன் உடல் அழிந்ததை அறிந்த திருமூலர் அவ்வரசை விட்டு வெளியெறி உபசித்தரை அடைந்து, கண்டீர்களா உபசித்தரே இந்த மனிதர்களின் எண்ணத்தயும் செயலையும், இவர்களுக்கா நல்லது நினைத்தீர்கள்!! உங்களுக்கு வந்த இந்த கவலை வேறு சித்தர் எவருக்கும் வரமலிருக்கவே
நடக்கவிருப்பதை அறிந்தும் நான் அனைத்தயும் நடத்தினேன் என்று கூறினார். உபசித்தர் தன் செயலுக்காக வருந்தினார்.


சொந்த உடல் கிடைக்கப்பெறாத திருமூலர், அரசனின் உடலை தூய்மைபடுத்தி அதன் மூலமே சஞ்சரித்தார். விதியின் காரனத்தால் திருமூலரின் ஆயுள் முடிவடய அவர் உடல் அழிந்தது. அதனால்
இறைவனோடு கலந்து இறவா நிலை பெற்ற அவர் ஆன்மா வேறு உடலை தனதாக்கி கொண்டது.

மனிதரின் நன்மை கருதிய சித்தரின் நிலை பார்த்தீர்களா...?!! இதனால்தான் சித்தர்கள் அவ்வளவு எளிதில் காட்சி தருவதில்லை. சிவனே கதி என்று தன்னை வெளிக்காட்டிக்கொள்ளாமல் வாழ்கின்றனர்.

ஓம் நம சிவாய!!!

அடியார்க்கு அடியாரின் அடியார்கள்!!!!

அறுபத்தி மூன்று நாயன்மார்கள்
1.அதிபத்தர்
2.அப்பூதியடிகள்
3.அமர்நீதியார்
4.அரிவட்டாயர்
5.ஆனாயர்
6.இசைஞானியர்
7.இடங்கழியார்
8.இயற்பகையார்
9.இளையான்குடிமாறன்
10.உருத்திரபசுபதியார்
11.எறிபத்தர்
12.ஏயர்கோன்கலிக்காமர்
13.ஏனாதிநாதர்
14.ஐயடிகள் காடவர்கோன்
15.கணநாதர்
16.கணம் புல்லர்
17.கண்ணப்பர்
18.கலிக்கம்பர்
19.கலியர்
20.கழறிற்றறிவார்
21.கழட்சிங்கர்
22.காரியார்
23.குங்கிலியக்கலயர்
24.காரைக்கால்
25.குலச்சிறையார்
26.கூற்றுவார்
27.கோச்செங்கட்சோழர்
28.போட்புலியார்
29.சடையனார்
30.சண்டேசுரர்
31.சந்தியார்
32.சாக்கியர்
33.சிறுப்புலியார்
34.சிறுத்தொண்டர்
35.சுந்தரர்
36.செருத்துணையார்
37.சோமாசிமாறர்
38.தண்டியடிகள்
39.திருக்குறிப்புத்தொண்டர்
40.திருஞானசம்பந்தர்
41.திருநாவுக்கரசர்
42.திருநாளைபோவார்
43.திருநீலகண்டர்
44.திருநீலகண்டயாழ்பாணர்
45.திருநீலநக்கர்
46.திருமூலர்
47.நமிநந்தியடிகள்
48.நரசிங்கமுனையாரையர்
49.நின்றசீர்நெடுமாறர்
50.நேசர்
51.புகழ்ச்சோழர்
52.புகழ்த்துனையார்
53.பூசலார்
54.பெருமிழவககுரும்பர்
55.மங்கயற்கரசியார்
56.மானக்கஞ்சாறர்
57.முருகர்
58.முனையடவார்
59.மூர்க்கர்
60.மூர்த்தியார்
61.மெய்ப்பொருளார்
62.வாயிலார்
63.விறண்மிண்டர்

வியாழன், 20 ஆகஸ்ட், 2015

காலில் விழுந்தவனை தன் தலையில் சூடிய சிவபெருமானின் கருணை!!!


தென்னாடுடய சிவனே போற்றி!!!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!!!

சப்தமகரிஷிகளில் அத்திரியின் புதல்வனான சந்திரன், நவகிரக அந்தஸ்த்து பெற ராஜசூய யாகம் நடத்தும் சூழ்நிலை ஏற்பட்டது. அவன் பிரம்மச்சாரியாக இருக்கும் போது அது இயலாது, அதற்க்கு கிரகஸ்த நிலயை (குடும்பஸ்த நிலை) அடைய வேண்டும்.

குழப்பத்தில் இருந்த சந்திரனுக்கு, காசிப முனிவர் ஓர் உபாயம் சொன்னார். அழகில் சிறந்த சந்திரனின் மீது தட்சனின் மகள்கள் 27பேரும் காதல் கொண்டுள்ளனர் என்றும், அவர்களை சந்திரன் மணந்தால் சிவபெருமானுக்கு மைத்துனன் முறை ஆகலாம் என்றும் கூறி சந்திரனை கல்யானத்திற்கு சம்மதிக்க வைத்தார். திருமணம் நடந்தேறியது.

சந்திரனின் குரு(teacher), தேவகுரு பிரகஸ்பதி ஆவார். தான் நடத்தவிருக்கும் ராஜசூய யாகத்திற்கு அழைத்தும் குரு வராமல் தன் மனைவியான தாரயை மட்டும் அனுப்பி வைத்தார். யாகம், சந்திரனும் அவன் 27மனைவிகளும் சூழ இனிதே நிறைவெறியது. சந்திரன் கிரக பதவியும், அவன் மனைவிகள் 27வரும் 27நட்சத்திர பதவி பெற்றனர். யாக முடிவில் குருவின் மனைவியான தாரை சந்திரனின் அழகில் மயங்கி சில காலம் சந்திரனது இல்லத்தில் தங்கி செல்வதக கோறினாள்.

நாளடைவில் தாரையின் அழகில் மதியிழந்த சந்திரன், தன் குருவின் மனைவி என்பதை மறந்தான். விரைவில் தாரை கருவுற்றாள். இருவரும் சாபத்திற்கு ஆளானார்கள். பத்தினி தர்மத்தை மீறிய தாரை பெண்களின் சாபத்திற்கும், குருபகவானின் சாபத்திற்கும் ஆளானாள். (ஜாதகத்தில் குருவும் சந்திரனும் உள்ள சில பாவ அமைப்புகள் ஜாதகருக்கு/ஜாதகிக்கு மாற்றான் மனைவி/கனவன் உடன் தொடர்பை ஏற்படுத்தும் சிக்கலானவை). சந்திரனுக்கும் தாரைக்கும் பிறந்தவரே புதன் ஆவார்.

முதல் தவறு தன் மனைவியினுடயதால் குரு சந்திரனை சபிக்கவில்லை, பகைத்துக்கொண்டார். ஆனால் விதி விளையாட்டால், நடந்ததை அறிந்த சந்திரனின் 27 மனைவிமார்களும் தன் தந்தை தட்சனிடம் சென்று முறையிட்டனர். தட்சன் தன் மகள்களுக்கு நிகழ்ந்த துரோகத்தை கண்டு சினமுற்று சந்திரனுக்கு சாபம் அளித்தார். சந்திரனானவர் 14 தினம் ஒவ்வொரு கலையாக குறைந்து  15வது தினத்தில் அழிந்து போக சாபமளித்தார்.

சந்திரன் பிரம்மனிடம் சாபவிமோட்சனம் வேண்டினான். தட்சன் தன் மகன் என்பதாலும், அவன் கோபம் நியாயமனது என்பதாலும் உதவ மறுத்துவிட்டார். மகாவிஷ்ணுவின் பரம பக்தன் தட்சன் எனவே விஷ்ணுவும் தட்சனுக்கு எதிராக செயல்பட முடியவில்லை.


இறுதியக 14ம் நாளில் சிவபெருமானின் காலில் விழுந்து வேண்டினான். கருணையே வடிவான சிவபெருமான் ஒளியிழந்த பிறையை எடுத்து தன் தலையில் சூடினார். தட்சனின் சாபம் நியயமானது என்பதால் முழு விமோசனம் தரவில்லை. பதிலாக சந்திரன் 15 நாட்களில் எவ்வாறு தேய்கிராரோ அவ்வாறே வளர்ந்து முழு நிலை அடைவார். இது சுழற்சியாக நடக்கட்டும் என்று சாபவிமோசனம் அளித்தார்.

அன்றிருந்து சிவன் பிறை சூடிய சந்திரசேகரனாக காட்சி தருகிரார்.

காலில் விழுந்தவனை தன் தலையில் சூடிய சிவபெருமானின் கருணை எத்தகயது....!!!

நாமும் அவன் பாதம் பணிந்து முக்தி பெறுவோம்!

ஓம் நம சிவாய!!

சிவன் - முதல் சித்தர்

தென்னாடுடய சிவனே போற்றி!!!
எந்நாட்டவர்கும் இறைவா போற்றி!!!


இந்த அண்டமானது சாதாரன மனிதனின் அறிவிற்கு அப்பாற்பட்டது. 19ஆம் நூற்றாண்டின் இறுதியில் மனித சமூகத்தால் உருவாக்கப்பட்ட அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை மேன்மேலும் வளர்ந்துள்ளது. எனினும், அந்த அறிவியலால் அவிழ்க்கப்படத முடிச்சுகள் பூமிக்கு உள்ளும் வெளியிலும் ஏராளமாக உள்ளன.

இவ்வாறிருக்கயில்,பகுத்தறிவு என்ற பெயரில் அறிவியலைக் காரணம் காட்டி ஆன்மீகத்தை பரிகாசிப்பது முறையற்ற செயல். இன்று அறிவியல் அறிஞர்கள் அங்கொருவரும் இங்கொருவருமாய் ஆய்ந்து கண்ட உண்மைகளை, நம் முன்னோர்கள் தனி ஒருவராக தம் மெய்ஞானத்தால் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே  கண்டுணர்ந்திருக்கின்றனர்.

அவ்வாறு மெய்ஞானம் பெற்று தீர்க்கதரிசியாய் வாழ்ந்தவர்க்ள்(ஏன், இன்றும் வாழ்ந்துகொண்டிருப்பவர்கள்), தனது புலன்களை அடக்கி அட்டமாசித்திகளை வசப்படுத்தி அண்டத்தை வலம் வந்தனர்.



மனிதனாகப் பிறந்து சித்தி பெற்றவரை சித்தர் என்று அழைத்தால், பிரபஞ்சத்தை தோற்றுவித்து அதில் உள்ள அணு முதல் அண்டம் வரை அனைத்திலும் நிறைந்திருக்கும் தேவனுக்கெல்லம் தேவனான சிவபெருமானை ‘சித்தனுக்கெல்லாம் சித்தன்’ என்று சொல்வதில் தவறேதுமில்லையே!!! தன்னை எண்ணி தவம் இருப்பவர்களுக்கு பாரபட்சம் இல்லாமல் சித்திகளை அருளும் ‘ஆதி சித்தன்’ சிவபெருமான்.

ஓம் நம சிவாய!!